பாக்டீரியாக்களை நம்புவோம்!
சென்ற அத்தியாயத்தில் மரபணுக்கள் எவ்வாறு புரதங்கள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன என்று பார்த்தோம். ஏன் மரபணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரையையோ அல்லது கொழுப்பினையோ உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை? புரதத்திற்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்? இந்தக் கேள்விகளுக்கு விடை அறிய நாம் முதலில் புரதங்களின் செயல்பாடுகளைப (Functions) பற்றியும் அதன் கட்டமைப்பைப் (Structure) பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.
Add Comment