திரிபுரா, கொல்கத்தாவில் இருந்து தங்கள் தூதரக அதிகாரிகளை பங்களாதேஷ் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. கனடா இந்தியா உறவுத் தடுமாற்றம் உண்டாகி வெகு நாள்கள் ஆகவில்லை. அதற்குள் இன்னொன்று.
இந்தியர்களும் உயிரைக் கொடுத்துப் பெறப்பட்டது பங்களாதேஷ் விடுதலை. அண்டை நாடுகள் என்பதைத் தாண்டிய உணர்வுப் பூர்வமான உறவு உள்ளது. அதைச் சிதைப்பது இரு நாடுகளுக்கும் பின்னடைவை உண்டாக்கும். பங்களாதேஷில் கைது செய்யப்பட்ட இஸ்கான் தலைவர் சின்மொயி கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி விவகாரத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே சிக்கல் பெரிதாகிறது. கிருஷ்ண தாஸ் இளம் வயதில் இருந்தே மதப் பேச்சாளராக இருந்துள்ளார். குழந்தைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். சமிலிடோ சனாதனி ஜகரன் ஜாட் என்கிற அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் கூட.
ஹஸினா பதவியை விட்டு அனுப்பப்பட்ட பிறகும் பங்களாதேஷில் வன்முறை தொடர்ந்தது நாம் அறிந்ததே. இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இடைக்காலத் தலைவர் யூனுஸ் அவற்றை அரசியல் வன்முறை என்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாகச் சென்று பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்தார். இத்தகைய அரசியல் கைகலப்புகள் அங்கே சகஜம். இந்நிலையில் இந்துக்களைத் தாக்கியவர்களை விசாரித்து விரைவில் நீதி வழங்க அக்டோபர் இறுதியில் கிருஷ்ண தாஸ் ஒரு பேரணி நடத்தினார்.
Add Comment