விளையாட்டுப் பாடம்
“வெளயாட்டுப் புள்ளயாவே இருக்க… கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் கெடயாது”.
இவ்வாறு குழந்தைகளைக் கடிந்துகொள்ளாத பெற்றோர் குறைவு. விளையாட்டாக இருப்பதுதானே குழந்தைகளின் இயல்பு. எங்கே தன் குழந்தை படிப்பில் பின்தங்கிவிடுமோ என்னும் அச்சம் பெற்றோருக்கு.
குழந்தைகள் கற்கவும் வேண்டும். குதூகலமாகவும் இருக்கவேண்டும். என்ன செய்யலாம்?
இதற்கான தீர்வுதான் “கேமிஃபிகேஷன்”. தற்போது பிரபலமாகிவரும் கற்பித்தல் முறைகளில் ஒன்று. “இந்தக் க்ளாஸ் போர்” என்று மாணவர்கள் கூறாமல் பார்த்துக்கொள்வதுதான் ஓர் ஆசிரியர் சந்திக்கும் கடினமான சவால்களில் ஒன்று. பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை.
கேமிஃபிகேஷன் என்றால் விளையாட்டாக்குவது. விளையாட்டு பிடித்திருக்கிறது. பாடம் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்? பாடத்தையே ஒரு விளையாட்டாக உருமாற்றம் செய்துவிட்டால் வெற்றி.
கற்றலை விளையாட்டாக மாற்றும்போது, மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது. கவனச் சிதறலும் குறைகிறது.
Add Comment