அந்த மனசு இருக்கே…
குட்டிச்சாத்தானால் கூடுவிட்டுக் கூடு பாய முடியும் என்று பார்த்திருந்தோம். ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர் போலவும் குட்டிச்சாத்தானால் உருமாற முடியும். இந்த வசதியை நாம் பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கு உதவும் ஓர் அவதாரமாக கு.சாத்தானை இன்று மாற்றவிருக்கிறோம்.
“மாக்” (Mock) என்று தொடங்கும் சில வார்த்தைகள் உள்ளன. உதாரணமாக mock-up. ஒரு சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை கோட் செய்வதற்கு முன் அதன் தோற்றப்போலியை உருவாக்குவது தான் மாக்-அப். இது ஒரிஜினல் சாஃப்ட்வேர் போலவே தோற்றமளிக்கும். ஆனால் வேலை செய்யாது. சிறுவயதில், ஜ்யோமெட்ரி வகுப்பில் “உதவிப்படம்” என்று ஒன்று வரைந்திருப்போமே? அதுவும் ஒரு வகையில் மாக் தான்.
அதேபோல இன்னுமொரு வார்த்தை “மாக்-இண்டர்வ்யூ”. கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட்டிற்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலம். இண்டர்வ்யூ போலவே ஒரு செட்டப் உருவாக்குவது. அதன் பின் கேள்விகள் கேட்பது.
பொதுவாக இது, பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடத்தப்படும். பலசமயம் முன்னாள் மாணவர்களைக் கொண்டு. சில நேரம் பேராசிரியர்கள் மூலமும். இது போக, செழிப்பான கல்லூரி என்றால் இதற்கெனத் தனியாக ஏஜென்சிகளை ஹயர் செய்திருப்பார்கள்.
Add Comment