24. காந்தி கைது
மோதிலால் நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது என்பதால், ஜவஹர்லால் நேரு வக்கீலாகத் தொழில் நடத்தினால்தான் குடும்பத்துக்கு வருவாய் என்கிற நிலை இல்லையே! அது மட்டுமில்லாமல், ஏற்கனவே, வக்கீல் தொழில் பார்ப்பதில் ஜவஹர்லாலுக்கு லேசான சலிப்பு இருந்தது. ரௌலட் சட்டம், ஜாலியன்வாலா பாக் படுகொலைகள், காந்திஜியின் சத்தியாக்கிரஹம் எல்லாமாய்ச் சேர்ந்து, ஜவஹர்லால் நேருவின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அது அவரது ஆர்வம் அரசியல் பக்கம் திரும்புவதற்குக் காரணமானது.
குறிப்பாக, ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் அவரைக் கொதித்தெழ வைத்தன.
Add Comment