Home » ஒரு குடும்பக் கதை – 2
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 2

2. பாரம் சுமந்தவர்

ஆக்ராவில் குடியேறிவிடுவது. அதுதான் திட்டம். டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார் கங்காதர் நேரு. அவருக்கு நான்கு குழந்தைகள். பன்ஸி தர், நந்து லால் என்று இரண்டு மகன்கள். பட்ராணி, மகாராணி என்று இரண்டு மகள்கள்.

ஆக்ரா போகிற வழியில், பிரிட்டிஷ் சிப்பாய்கள் கங்காதர் குடும்பத்தினரை தடுத்து நிறுத்தி விசாரித்தார்கள். அவர்களுக்கு கங்காதர், ஒரு பிரிட்டிஷ் குடும்பத்துக் குழந்தையைக் கடத்திக் கொண்டு போகிறாரோ என்று சந்தேகம். காரணம், காஷ்மீர பண்டிட் பரம்பரையில் வந்த கங்காதரின் பெண் குழந்தைகளின் நிறமும் பொலிவும் அப்படி. ஆகவே, அந்தக் குழந்தைகளை வெள்ளைக்காரக் குழந்தைகள் எனத் தவறாக நினைத்துவிட்டார்கள் சிப்பாய்கள். ஆங்கிலப் புலமை மிகுந்த கங்காதர் நேருவின் மகன்கள் சிப்பாய்களுக்கு விளக்கிச் சொல்ல, அன்று அவர்கள் பிழைத்தார்கள். இல்லையெனில், அன்றைய சிப்பாய்க் கலகப் பின்னணியில், ஒரு பிரிட்டிஷ் குழந்தையைக் கடத்தியதாகச் சொல்லி, பிரிட்டிஷ் சிப்பாய்கள் அந்த இடத்திலேயே கங்காதர் நேருவையும், அவர் மனைவி ஜியோராணியையும் சுட்டுக் கொன்றிருப்பார்கள். இந்திய அரசியல் வரலாறே கூட வேறு மாதிரி ஆகியிருக்கும்.

1857ல் ஆக்ராவுக்கு வந்த கங்காதர் நேரு, அதன் பிறகு நான்கு வருடங்களே உயிர் வாழ்ந்தார். 1861 தொடக்கத்தில் அவர் மரணமடைந்தார். கணவர் இறந்தபோது ஜியோ ராணி கருவுற்றிருந்தார். நான்கு மாதங்கள் கழித்து அவர் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு மோதிலால் என்று பெயரிட்டனர்.

அப்பாவின் திடீர் மரணம், அந்த இழப்பில் இருந்து மீளாத அம்மா, குட்டிப் பாப்பா வரவு என்ற இக்கட்டான சூழ்நிலையில், மூத்த மகன் பன்ஸி தர் தலையெடுத்து, குடும்ப பாரத்தைச் சுமக்க முன்வந்தார். ஆக்ராவில், ‘சத்தர் திவானி அதாலத்’ என்ற பிரிட்டிஷ் வருவாய்த்துறை நீதிமன்றத்தில் தீர்ப்புகளைப் பிரதி எடுப்பவராக அவருக்கு வேலை கிடைத்தது.

அடுத்து, ஆக்ரா கல்லூரி முதல்வராக இருந்த ஆண்டர்சன் என்பவரின் சிபாரிசில் நந்த்லாலுக்கு ராஜஸ்தான் பகுதியில் இருந்த கேத்ரி என்ற சிறிய சமஸ்தானத்தில் ஆசிரியராக வேலை கிடைத்தது. சீக்கிரமே அவர் தனது திறமையால், அந்த சமஸ்தானத்தை ஆட்சி செய்த ராஜா ஃபத்தே சிங்கின் தனிச் செயலாளர் ஆனார். அங்கே தனது அறிவையும், ஆளுமையையும் வெளிப்படுத்த, ராஜா ஃபத்தே சிங், நந்த்லாலை தனது சமஸ்தானத்தின் திவானாக நியமித்தார்.

அது ஒரு சந்தர்ப்பம்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!