Home » சீஸரின் மனைவி மட்டும்தானா?
நம் குரல்

சீஸரின் மனைவி மட்டும்தானா?

சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே புழங்கும் ஒரு சொற்றொடர்.

ஜூலியஸ் சீஸர் ரோம் சாம்ரஜ்யத்தின் தலைமை போதகராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம். அவர் குடியிருந்த அரசாங்க வீட்டில், அவர் மனைவி போம்பியா ஒரு விருந்து வைக்கிறார். அந்த விருந்தில் ஆண்கள் யாருக்கும் அனுமதியில்லை. அதனால், பூப்லியஸ் க்ளோடியஸ் புல்ச்சர் என்ற இளைஞன், பெண் வேடமிட்டு விருந்து நடக்கும் இடத்திற்குள் நுழைந்து விடுகிறான். இருப்பினும் அவன் பிடிபட்டுவிடுகிறான். விசாரணை நடக்கிறது. விசாரணையில் போதுமான சாட்சிகள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுவிடுகிறான்.

என்றாலும் சீஸர், தன் மனைவி போம்ப்பியாவை விவாகரத்து செய்கிறார். அதற்கு சீஸர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? ‘என் மனைவி சந்தேகத்தின் நிழலில்கூட இருக்கக் கூடாது’. இதிலிருந்து தோன்றியதுதான், ‘சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்ற சொற்றொடர்.

இதன்படி யாரெல்லாம் இருக்க வேண்டும்?

ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே அப்படியிருந்தால் அதைவிட சொர்க்கம் ஏதுமில்லை. நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகிய தூண்கள் தவறு செய்கிறபோது,  நீதித்துறை என்கிற மூன்றாவது தூண் கண்டிக்கிறது; தண்டிக்கிறது. பத்திரிகை என்னும் நான்காவது தூண், அனைவரின் தவறுகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துகிறது. ஆனாலும் பத்திரிகைகளும் சட்டங்களுக்கு உட்பட்டவையே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • siva gnanam says:

    Nice

  • Deepanthirumaran Ramadoss says:

    “Caesar’s Wife Must Be Above Suspicion”, “சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருந்தாக வேண்டும்”
    எனும் சொற்றொடரை எங்கேனும் எப்போதேனும் கேட்டிருக்கக்கூடும். இருப்பினும் , கதையாக படித்தபின் அவ்வாக்கியத்தின் அர்த்தத்தை தெளிவாக விளங்கச் செய்தது.
    நல்லவேளையாக ரோமில் அக்னிப்பரீட்சை வழக்கம் இல்லைபோலும், ஆதலால் சந்தேகத்திற்கு இடமான மனைவியை விவாகரத்து செய்வதோடு போனது.
    அதுபோல் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக யார் இருக்கவேண்டுமென படைப்பாளர் குறிப்பிடுவது, பத்திரிக்கையாளர்களை. ஜனநாயகத்தின் நான்கில் ஒரு தூணாய் செயல்படும் பத்திரிக்கை துறையின் , பலத்தையும் சுதந்திரத்தையும் பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் பேசுகிறது இக்கட்டுரை.
    வேருடன் மரத்தை பிடுங்கி வீசும் பலமுள்ள யானை, கையூட்டெனும் சங்கிலியில் கட்டுண்டு கட்சிகளிடம் வாழைப்பழத்திற்கு கையேந்துவது அழகல்ல என்பதை வலியுறுத்துகிறது இக்கட்டுரை.
    செய்யும் பணியில் நேர்மை இருப்பின் யாருக்கும் தலைவணங்க வேண்டா என்பதை, தன் சொந்த அனுபவம் மூலம் இளங்கோவன் அவர்கள் பதிவு செய்தது மெய் சிலிர்க்க வைத்தது.

  • Vaithianathan srinivasan says:

    நான்காவது தூண் மட்டும் சரியில்லை என்றால் வருத்தபடலாம். ஜனநாயகத்தை காக்க வேண்டிய மத்த மூன்று தூண்களுக்குமே மராமத்து தேவை!!!!!!

  • Sarulatha Selvan says:

    சரியான நேரத்தில் சாட்டையடியான கட்டுரை.. ஊடகங்கள் ஒருசாரபாகத்தான் இருக்கின்றன, சிலவற்றைத் தவிர.. சரியான தகவலைப் பிரித்தெடுப்பது நம்முடைய்கடமையாகி்விட்டது..

  • S.Anuratha Ratha says:

    பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையின் பொறுப்பு குறித்த சிறந்த கட்டுரையை படிக்கும் போது மனநிறைவை தருகிறது.தலைமை நீதிபதி கூறியவற்றை படித்த நினைவும் வருகிறது.முதல் இதழான மெட்ராஸ் பேப்பர் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நிற்கும் என்று பறை சாற்றுவது போல இக் கட்டுரை அமைந்துள்ளது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!