Home » அமீரகத்தில் ஒரு பிச்சாவரம்!
சுற்றுச்சூழல்

அமீரகத்தில் ஒரு பிச்சாவரம்!

துபாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. பின் மீன் பிடி கிராமமாக மாறியது. காய்ந்த வெயிலையும் மணலையும் சும்மா விட்டு வைக்காமல் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள் ஷேக்மார்கள்.

இருப்பதை வைத்து எல்லா விஷயத்திலும் உச்சம் தொடுவதில் ஐக்கிய அமீரக அரசர்கள் கில்லாடிகள். பாலைவனமும் கடலும் சேர்ந்த இடத்தில் மாங்குரோவ் காடுகளும் இருக்கின்றன. பிச்சாவரம் போல் பெரிய காடுகள் இல்லையென்றாலும், அபுதாபியில் கணிசமான பரப்பளவில் காடுகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி துபாய், உம் அல்  குவைன் போன்ற இடங்களிலும் சில மாங்கரோவ் காடுகள் இருக்கின்றன.

மாங்குரோவ் காடுகளை வைத்து இவர்கள் என்ன செய்கிறார்கள்? அதற்கு முன் இந்தக் காடுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைத் தெரிந்து கொள்வது முக்கியம். இவற்றுக்குத் தமிழில் அலையாத்திக் காடுகள் என்று பெயர்.

கடல் கரையைத் தொடும் சதுப்பு நிலங்களில் அலையாத்திக் காடுகளைக் காணலாம். பலவிதமான நீர்வாழ் உயிர்களுக்கு இவை வீடாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி அமீரகத்தில் உள்ள காடுகளில் அறுபதுக்கும் மேற்பட்டவை பறவைகளுக்குச் சரணாலயமாக உள்ளன. இங்கு வளரும் மரங்கள் நிலத்தில் வளரும் மரங்களைப் போல திடகாத்திரமாக இருக்காது. ஆனால் இதன் இயல்பு சுனாமிக்கே சுண்ணாம்பு கொடுப்பது!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இயற்கை வளத்தை பாதுகாப்பதுடன் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல் படுவது மிகவும் பாராட்ட வேண்டிய அம்சம்.வியத்தகு வளர்ச்சி.அமேசான் காடுகளை விட நாலு மடங்கு கார்பனை உறிஞ்சுகிறது என்பதை இதன் மூலமே அறிகிறேன்.நம் நாட்டில் எந்தளவு அலையாத்தி காடுகளை பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!