நான்கு தலைமுறைகள் மனிதர்கள் வாழ்ந்த, நூறாண்டுகளைத் தொடவுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களின் ஆயுள் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் அங்கு வாழும் சுமார் எண்ணூறு குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மாஞ்சோலை என்றாலே 1999-ஆம் ஆண்டு நடந்த தாமிரபரணிப் படுகொலைதான் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வரும். மேலும் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் கூலித் தொழிலாளிகளின் ரத்தமும் வியர்வையும் கலந்தது மாஞ்சோலைச் சரித்திரம். இப்போதும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் செயல்பாடு நிறுத்தப்படும் போது பாதிக்கப்படப் போவது தேயிலைத் தோட்டத்தில் பணியுரியும் எண்ணுறு கூலித் தொழிலாளிகளும் அவர்களுடைய குடும்பங்களுமே.
இயற்கை சிறிது அடர்ந்த வண்ணத்தில் தீட்டியிருக்கும் ஓவியம். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலைப் பகுதி. எல்லா ஊரின் பெயர்களுக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனால் எப்போது யார் அந்த ஊருக்கு அந்தப் பெயர் வைத்து என்ற தகவல்கள் இருக்காது. மாஞ்சோலைப் பகுதிக்கு அந்த பெயர் தேயிலைத் தோட்டம் உருவான நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வைக்கப்பட்டது.
Add Comment