குறுங்கடன்கள் ஏழைகளை ஏற்றம் பெறச் செய்கின்றன. குறுங்கடன் முறைகள் பலவுள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது சுயஉதவிக் குழுக்கள் முறை. இது பெரும்பாலும் மகளிர்க்கு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, பெண்கள் தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னணியில் இருக்கிறார்கள். மற்றொன்று, பெண்களுக்குக் கொடுக்கும் கடன் அவர்களது குடும்பத்துக்கே போய்ச்சேருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை கிராமத்தில் அதிகம் பார்த்திருக்கிறோம். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று பலர் பயனடைந்ததைக் கேட்டிருக்கிறோம். எப்படிச் செயல்படுகிறார்கள் இவர்கள்?
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment