நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் பல காரணிகளுள் ஒன்று, அந்நாட்டில் உள்ள, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை. எளிமையாகச் சொல்வதென்றால், சுமார் எட்டரைக் கோடி இந்திய ரூபாய் பெறுமதியுடைய சொத்துக்களைக் கொண்ட மில்லியனர்களின் எண்ணிக்கை. உலகளாவிய சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும் இந்தச் செல்வந்தர்களின் இடம்பெயர்வு ஆகியவை ஒன்றுக்கொன்று சரிவிகித சமனானவை.
உலகில் ஒரு நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் இத்தகைய பணக்காரர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை லண்டனைச் சேர்ந்த Henley & Partners என்கின்ற பிரித்தானிய நிறுவனம் வருடந்தோறும் செய்து வருகிறது. இது, தனிநபர்களுக்கும், அரசுகளுக்கும் முதலீடு மற்றும் குடியுரிமை சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனம்.
இந்த ஆய்வின்படி இந்த ஆண்டின் முடிவில் சுமார் நான்காயிரத்து மூன்று இந்தியப் பணக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்கள் மட்டுமின்றி, இடம்பெயரும் பல நாட்டுச் செல்வந்தர்களின் முதல் தெரிவாக இருப்பது ஐக்கிய அரபு இராச்சியம் தான். அதிலும் குறிப்பாக துபாய்.
Add Comment