Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 29
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 29

29. குஜராத்தின் மைந்தர்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான பெண் போராளிகள், தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அன்றைக்கு இங்கிருந்த சமூகச் சூழ்நிலையும் கட்டுப்பாடுகளும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அரசியலில் ஈடுபடுவதற்குத் துணைநிற்காவிட்டாலும், கண்முன்னால் தாய்நாட்டுக்கு இப்படியோர் அநீதி நடக்கும்போது, அதை எதிர்த்துப் பெரும் புரட்சி உண்டாகும்போது அவர்களால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா? நாடுமுழுவதும் ஏகப்பட்ட பெண்கள் தங்களுடைய தந்தையர், கணவர்கள், சகோதரர்களுடைய அரசியல் செயல்பாடுகளைப் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்டு ஊக்கம் பெற்றார்கள், தாங்களாக முன்வந்து போராட்டங்களில் கலந்துகொண்டார்கள், களப்பணி செய்தார்கள், காவல்துறையினரிடம் அடிபட்டார்கள், சிறைக்குச் சென்றார்கள், துன்பப்பட்டார்கள், உயிரைக்கூடத் தியாகம் செய்தார்கள்.

இன்னும் பல பெண்கள் பின்னணியிலிருந்து பேராதரவு வழங்கினார்கள், தங்கள் குடும்பத்திலிருக்கும் ஆண்களுடைய விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளை ஊக்குவித்து, ‘வீட்டை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் நாட்டுக்காகப் போராடுங்கள்’ என்று துணிவூட்டினார்கள், போராட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகத் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளைக் கழற்றிக்கொடுத்தார்கள்.

கஸ்தூரிபா இந்தியாவில் இருந்தவரைக்கும் வெளியுலகத்தைத் தெரிந்துகொள்ளாமல், அதில் பெரிய ஆர்வமும் காட்டாமல் வழக்கமான குடும்பத் தலைவியாக வாழ்ந்தவர்தான். ஆனால், காந்தியைச் சமூகத் தலைவராக்கிய தென்னாப்பிரிக்கச் சூழல் கஸ்தூரிபா-வுக்கும் நல்ல அரசியல் புரிந்துகொள்ளலை வழங்கியிருந்தது. அவரே பல போராட்டங்களில் நேரடியாங்கப் பங்கேற்றார், மற்ற பெண்களிடம் பேசி, அவர்களை ஊக்கப்படுத்தி அணிதிரட்டினார், கைது செய்யப்பட்டுச் சிறைக்கும் சென்றார்.

இதனால், 1915ல் மும்பையில் காந்திக்கு வழங்கப்பட்ட வரிசையான பாராட்டு, வரவேற்புக் கூட்டங்களெல்லாம் அவருக்குமட்டும் சொந்தமானவை என்று எண்ணிவிடக்கூடாது. இந்தக் கூட்டங்களில் பேசிய பெரும்பாலான தலைவர்கள் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்தில் கஸ்தூரிபா காந்தியின் பங்களிப்பையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். கஸ்தூரிபா-வை எடுத்துக்காட்டாகக் கொண்டு இந்தியப் பெண்களிடையில் விடுதலை உணர்வைத் தூண்டலாம் என்று அவர்கள் விரும்பியிருக்கவேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!