Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 33
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 33

33. இந்திய ஊழியர் சங்கம்

காந்தி மும்பையிலிருந்து பூனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார், தன்னுடைய குருநாதர் கோகலேவை மீண்டும் சந்திப்பதற்காக, அவருடைய ‘இந்திய ஊழியர் சங்க’த்தில் (Servants of India Society) சேர்வதற்காக.

தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்தியை இந்தியாவுக்கு அழைத்தபோதே, ‘நீங்கள் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துவிடவேண்டும், அதன் தலைமையகத்தில் என்னோடு தங்கிவிடவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார் கோகலே. காந்தியும் அதைத்தான் விரும்பினார்.

இந்திய ஊழியர் சங்கத்தின் கிளையொன்று மும்பையிலும் இருந்தது. அவர்கள் நடத்திய வரவேற்பு விழாவொன்றில் கலந்துகொண்ட காந்தி, ‘இனி இந்தச் சங்கம்தான் என்னுடைய பணிக்கான களம். இச்சங்கத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிற உங்கள் அனைவரையும் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில், கோகலே அவர்களுடைய இணைந்து பணிபுரியும் நல்வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறதே!’ என்று உணர்ச்சிவயப்பட்டிருந்தார்.

காந்தியே வலியச் சென்று இணையும் அளவுக்கு இந்திய ஊழியர் சங்கத்தில் அப்படியென்ன சிறப்பு?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!