Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 35
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 35

35. துணையுண்டு, குறையில்லை

காந்தி கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்திருந்தாலும், இந்திய ஊழியர் சங்கத்தில் தங்கியிருந்தாலும், அங்கிருந்த மற்ற அமைப்பினர் அவரைச் சும்மா விட்டுவிடவில்லை. வழக்கம்போல் வரவேற்புக் கூட்டங்கள், மாலைகள், ஊர்வலம், சொற்பொழிவுகள், உரையாடல்கள், விருந்துகள் என்று பூனா அவரை மிகுந்த அன்புடன் கொண்டாடியது.

பூனா நகராட்சி, தக்காணச் சபை, சர்வஜனிக் சபை எனப் பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் காந்தி பங்கேற்றார், மக்களுடன் உரையாடினார், கேள்விகளுக்குப் பதிலளித்தார். ‘அவருடைய எளிமையான வாழ்க்கையையும் உயர்ந்த எண்ணங்களையும் நேரில் பார்ப்பதே ஒரு மிகச் சிறந்த கல்வியாக அமைந்தது. அவருடைய பணிவான பழகுமுறையும் மனம் திறந்த பேச்சும் அவருக்குள் கனன்றுகொண்டிருக்கிற தூய்மையான உணர்வை வெளிப்படுத்தின’ என்று காந்தியின் வருகையை விவரித்தது திலகரின் ‘The Maharatta’ இதழ்.

இந்தக் கூட்டங்களில் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம், அதற்கான தீர்வு, அங்குள்ள இந்தியர்களின் இப்போதைய நிலை போன்றவற்றைப்பற்றி விரிவாகப் பேசினார் காந்தி. ஆனால், தன்னுடைய அடுத்த திட்டங்களைப்பற்றி அவர் மேலோட்டமாகத்தான் குறிப்பிட்டார், ‘நான் இன்னும் எதையும் தீர்மானிக்கவில்லை. நான் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வேனா என்பதுகூட இன்னும் உறுதியாகவில்லை.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!