39. விரிசல் வேண்டாம்
கோகலே காந்தியை எப்போதும் இந்திய ஊழியர் சங்கத்தின் உறுப்பினராகத்தான் நினைத்தார், அப்படித்தான் நடத்தினார்.
ஆனால், அந்தச் சங்கத்தின் சட்டப்படி காந்தி அதில் இன்னும் உறுப்பினராகவில்லை. மற்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
கோகலே இருந்தவரையில் காந்தி இதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை, ‘நான் கோகலே சொல்வதைச் செய்யப்போகிறேன். அதற்கு உறுப்பினர் என்கிற அடையாளம் தேவையில்லை’ என்று நினைத்துவிட்டார்.
ஆனால் இப்போது, கோகலே இல்லாத சூழ்நிலையில் தான் இந்திய ஊழியர் சங்கத்தில் முறையாக இணைவதுதான் சரி என்று காந்திக்குத் தோன்றியது. அதுதான் கோகலேவின் ஆன்மாவை அமைதியடையச்செய்யும் என்று அவர் நினைத்தார்.
Add Comment