Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 50
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 50

50. உரையாடுவோம், வாருங்கள்

சென்னை ரயில் நிலையத்தின் வாசலில், காந்தியையும் கஸ்தூரிபாவையும் அழைத்துச்செல்வதற்கென ஒரு குதிரை வண்டி காத்திருந்தது.

ஆனால், வழக்கம்போல், அதிலிருந்த குதிரைகளெல்லாம் கழற்றிவிடப்பட்டுவிட்டன. காந்தியின் வண்டியை நாங்களேதான் ஊர்வலமாக இழுத்துச்செல்வோம் என்று இளைஞர்கள் பிடிவாதம் பிடித்தார்கள்.

சென்ட்ரலில் தொடங்கி, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்குராமசெட்டி தெருவில் இருக்கும் நடேசன் & கோ நிறுவனம்வரை காந்தியும் கஸ்தூரிபா-வும் திறந்த வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டார்கள். வழியெங்கும் கூடியிருந்த மக்கள் அவர்களை அன்போடு வாழ்த்தி வரவேற்றார்கள்.

காந்தியின் சென்னை வருகையைக் கொண்டாடும்வகையில், சென்னை ஜார்ஜ்டவுனைச் சேர்ந்த கணேஷ் & கோ என்ற நிறூவனம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டது. இவ்வகையில் பத்தாயிரம் நூல்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!