Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 61
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 61

61. ஒரு நிமிடம் கொடுக்கிறேன்

சென்னைக்கு வந்திருந்த காந்திக்குச் சிறு உதவிகளைச் செய்வதற்காகச் சில இளைஞர்கள் தன்னார்வலர்களாக வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், கே. சுவாமிநாதன்.

அத்தனைப் பேரில் இவரைமட்டும் தனித்துக் குறிப்பிடக் காரணம் உள்ளது. பின்னாட்களில் இந்தப் பேராசிரியர் சுவாமிநாதன் காந்தியின் எழுத்துகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ‘Collected Works of Mahatma Gandhi’ என்னும் பெருந்தொகுதியை உருவாக்கிய குழுவுக்குத் தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுப்புதான் இன்றைக்கும் காந்தியை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு முதன்மையான ஆவணம்.

காந்தியை முதன்முறை சந்தித்தபோது சுவாமிநாதனுக்கு 19 வயதுதான். அவருடைய தந்தையும் ஜி. ஏ. நடேசனும் நல்ல நண்பர்கள், உறவினர்கள். அதனால், நடேசனின் வீட்டில், அலுவலகத்தில் தங்கிப் பணியாற்றிய காந்தியுடன் பழகும் நல்வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அப்போது, வழக்கமான பேனாக்களுக்கான நிப் (முனை) வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது. சுதேசிக் கொள்கையைப் பின்பற்ற விரும்பிய காந்தி அவற்றைத் தவிர்த்துவிட்டு Quill Pen என்னும் இறகுப் பேனாவைத்தான் பயன்படுத்தினார், அதை உள்நாட்டில் உருவான மையில் தொட்டுத்தொட்டு எழுதினார். இந்த இறகுப் பேனாக்களைத் தூய்மைப்படுத்துகிற, மைக்கூட்டை நிரப்புகிற வேலை சுவாமிநாதனுடையது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!