64. சீர்திருத்தம் தொடங்கும் இடம்
1898ம் ஆண்டு நடந்த ஒரு பழைய நிகழ்வு. அப்போது காந்தியும் கஸ்தூரிபா-வும் தென்னாப்பிரிக்காவிலுள்ள டர்பனில் வசித்துவந்தார்கள். காந்தியின் அலுவலகப் பணியாளர்கள் சிலரும் அவர்களோடு தங்கியிருந்தார்கள்.
இந்தப் பணியாளர்களுடைய சாதி, மதம் போன்றவற்றைக் காந்தி பொருட்படுத்தவில்லை, அவர்களைத் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களாகத்தான் எண்ணினார், அன்போடும் மதிப்போடும் நடத்தினார்.
காந்தியின் இயல்பு கஸ்தூரிபா-வுக்குத் தெரியும். ஆனால், அவரால் எல்லா மதத்தினர், சாதியினரையும் ஒரேமாதிரி நினைக்கமுடியவில்லை. அதனால், அவர்களுக்குள் அவ்வப்போது சண்டைகள் வருவதுண்டு.
ஒருமுறை, கிறித்துவர் ஒருவர் காந்தியின் வீட்டில் தங்கியிருந்தார். அவருடைய கழிவுப் பானையைக் கஸ்தூரிபா தூய்மைப்படுத்தவேண்டியிருந்தது. இது அவருக்குப் பிடிக்கவில்லை.
ஏனெனில், அந்தக் கிறித்துவருடைய பெற்றோர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், கஸ்தூரிபா அவரையும் தாழ்த்தப்பட்டவராகக் கருதினார், அவருடைய கழிவுப் பானையை எடுத்துக் கொட்டித் தூய்மைப்படுத்துவதை இழிவாக நினைத்தார்.
இதனால், காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. சினம் கொண்ட காந்தி கஸ்தூரிபா-வை வீட்டிலிருந்து வெளியில் தள்ள முயன்றார்.
Add Comment