Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 65
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 65

65. பேச்சைக் குறையுங்கள்!

நாம் இன்றைக்குத் ‘தமிழ்நாடு’ என்று அழைக்கும் மாநிலம் இந்தியா விடுதலை பெற்றபிறகு உருவானதுதான். அதற்குமுன்னால், அதாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது மாநிலங்களுக்குப் பதில் மாகாணங்கள்தான் (Provinces) இருந்தன.

எடுத்துக்காட்டாக, இப்போதைய தமிழ்நாட்டின் பெரும்பான்மைப் பகுதி ‘மெட்ராஸ் மாகாணத்தில்’ இடம்பெற்றிருந்தது. இதேபோல் மேற்கில் பம்பாய் மாகாணமும் கிழக்கில் வங்காள (கல்கத்தா) மாகாணமும் இருந்தன. இவை ஒவ்வொன்றையும் ஆட்சி செய்வதற்குத் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இன்றைய இந்திய வரைபடத்தோடு ஒப்பிட்டால், தென்னிந்தியாவின் பெரும்பகுதி ‘மெட்ராஸ்’ மாகாணத்தில் இருந்தது என்று சொல்லலாம். ஹைதராபாத், மைசூர், திருவாங்கூர், கொச்சின், புதுக்கோட்டை போன்ற சில பகுதிகளைமட்டும் வெவ்வேறு அரசர்கள் ஆண்டுவந்தார்கள். மீதமிருந்த தென்னிந்தியப் பகுதிகள் அனைத்தும் மெட்ராஸ் மாகாணத்தின்கீழ் வந்தன. இங்கு வாழும் மக்கள் முதன்மையாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசினார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!