Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 69
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 69

69. அகமதாபாதில் ஆசிரமம்

ஒவ்வோராண்டும் செப்டம்பர் 15 இந்தியாவில் ‘பொறியாளர் நாளாக’க் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், அது எம். விஸ்வேஸ்வரய்யா-வின் பிறந்த நாள்.

கட்டடப் பொறியாளர், தொலைநோக்குச் சிந்தனையாளர், சிறந்த நிர்வாகி, தலைவர் என்று பல முகங்களைக் கொண்ட விஸ்வேஸ்வரய்யா இன்றைய கர்நாடகத்தில் பிறந்தவர், பம்பாய் மாகாணத்தில் பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர், பல பெரிய நீர்ப்பாசன அமைப்புகளையும் அணைக்கட்டுகளையும் தண்ணீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் அமைப்புகளையும் வடிவமைத்துக் கட்டியவர். பின்னர் அவர் அன்றைய மைசூரு அரசில் திவானாகப் பொறுப்பேற்றபோது, அங்கு இன்னும் பல பெரிய திட்டங்களை முன்னின்று நடத்தினார். குறிப்பாக, அந்தப் பகுதியைத் தொழில்மயமாக்கியதில் அவருடைய பங்கு முக்கியமானது.

தொழிற்சாலைகள் வேண்டாம், நவீன இயந்திரங்கள் வேண்டாம் என்று நினைக்கிற காந்திக்கும் ‘தொழில்துறையின் வழியாக வளமை’ என்ற பெயரில் புத்தகம் எழுதிய எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கும் இந்த விஷயத்தில் ஏழாம் பொருத்தம்தான். ஆனால், நாட்டுப்பற்றிலும் இந்தியா முன்னேறவேண்டும் என்கிற எண்ணத்திலும் அவர்கள் ஒத்துப்போனார்கள். காந்தி பெங்களூருக்கு வருகிறார் என்றவுடன் அவரைப் பார்ப்பதற்கென மைசூரிலிருந்து புறப்பட்டு வந்தார் எம். விஸ்வேஸ்வரய்யா. அவர்கள் இருவரும் ஒரு மணிநேரம் தனியாகப் பேசினார்கள்.

அதன்பிறகு, காந்தி மும்பைக்கு ரயிலேறினார். அவரோடு கஸ்தூரிபா, நாய்க்கர், வெ. அ. சுந்தரம் ஆகியோரும் வந்தார்கள்.

இந்த முறை காந்தி மும்பையில் அதிக நேரம் தங்கவில்லை. மே 10 அன்று காலை மும்பைக்கு வந்திறங்கியவர் இந்திய ஊழியர் சங்கத்தில் தங்கியிருக்கிறார், அன்று இரவே அகமதாபாத் கிளம்பிவிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!