பகுதி 4: அரையாண்டுத் தேர்வு
71. பதினாறரை பயணச்சீட்டுகள்
காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்துக்கான செலவு மதிப்பீடு தயாராகிவிட்டது. அந்தச் செலவுகளுக்கான பணம் யாரிடமிருந்து வரும் என்பதும் தீர்மானமாகிவிட்டது. ஆசிரமத்தை எங்கு அமைப்பது என்பதும் தெளிவாகிவிட்டது. இனி மீதமிருக்கும் ஒரே விஷயம், அங்கு தங்கப்போகும் ஆசிரமவாசிகளை வரவழைப்பதுதான்.
இந்தப் புதிய ஆசிரமத்தின் மையமாக இருக்கப்போகும் ‘ஃபீனிக்ஸ்’ குழுவினர் அப்போது ஹரித்வாரில் இருந்தார்கள். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ‘கும்பமேளா’வில் தூய்மைப் பணிகளைச் செய்வதற்காகக் காந்தியுடன் ஹரித்வார் சென்ற அவர்கள் அங்கேயே சிரத்தானந்தர் குருகுலத்தில் தங்கிவிட்டார்கள். காந்தி தில்லி, சென்னை, மாயவரம், பெங்களூரு என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்தக் குழுவினர் ஹரித்வாரில் புனிதப் பயணிகளுக்குச் சேவை செய்துகொண்டிருந்தார்கள்.
மே 13 அன்று, காந்தி மகன்லாலுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘இங்கு அகமதாபாதில் நம் ஆசிரமத்துக்கு ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். அதனால், நீங்கள் எல்லாரும் உடனடியாக ஹரித்வாரிலிருந்து புறப்பட்டு அகமதாபாதுக்கு வந்துவிடுங்கள்.’
அத்தனைப் பேர் ஹரித்வாரிலிருந்து அகமதாபாத் வருவதற்குப் பணம்?
அதற்கும் காந்தி ஏற்பாடு செய்திருந்தார். சேத் மங்கள்தாஸ் கிரிதர்தாஸிடமிருந்து இருநூறு ரூபாயை வாங்கி மகன்லாலுக்கு அனுப்பிவைத்தார் அவர். அதோடு, அந்தப் பணத்தை எப்படிச் செலவுசெய்யவேண்டும் என்றும் விரிவாக எழுதினார்:
Add Comment