Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு-72
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு-72

72. சத்தியாக்கிரக ஆசிரமம்

மே 12 அன்று, அகமதாபாதில் சேத் மங்கள்தாஸைச் சந்தித்துப் பேசினார் காந்தி. அதன்பிறகு, உடனடியாக ராஜ்கோட் கிளம்புவதாக அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், மங்கள்தாஸ் அவரை வற்புறுத்தி இன்னொரு நாள் தங்கவைத்தார். அதனால், காந்தியின் பயணம் சற்று தள்ளிப்போனது.

காந்தியுடன் அவருடைய ஆசிரமத்தைப்பற்றியும் அதற்கான செலவுகள், நன்கொடைகளைப்பற்றியும் உரையாடிய இந்த நாட்களில் மங்கள்தாஸுக்கு இருமல் தொந்தரவு இருந்திருக்கிறது. ‘இதைக் குணப்படுத்துவதற்காக அவர் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கியுள்ளார்’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் எழுதுகிறார் காந்தி. ஆனால், சாப்பிடாமல் இருந்தால் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லி அவரைத் தூண்டியது காந்திதானா என்று தெரியவில்லை!

மே 15 அன்று காந்தி ராஜ்கோட்டுக்கு வந்தார், அங்கு நான்கு நாட்கள் தங்கினார், பலரைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இவை எல்லாம் அவருடைய குடும்பம் தொடர்பான தனிப்பட்ட நிகழ்ச்சிகள்தான். அங்கு அவர் பொது நிகழ்ச்சிகள் எவற்றிலும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!