Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 80
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 80

80. பூனா பயணம்

‘நான் இன்னும் முழுமையான பற்றற்ற நிலையை எட்டவில்லை’ என்றார் மகன்லால்.

‘அதை நானே இன்னும் எட்டவில்லை’ என்றார் காந்தி, ‘எடுத்துக்காட்டாக, நான் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதன் நுணுக்கமான அனைத்து அம்சங்களையும் நான் பின்பற்றுகிறேனா என்றால், இல்லை. அவ்வப்போது என் மனமோ, கண்களோ தொந்தரவுக்குள்ளாவதை என்னால் மறுக்கமுடியாது.’

‘அதேபோல், நான் உண்மையைப் பின்பற்றுகிறேன். ஆனால், அவ்வப்போது தெரிந்தோ தெரியாமலோ சில விஷயங்களை மிகைப்படுத்திப் பேசுகிறேன். அதுவும் பொய்தானே?’

‘நான் நாக்கைக் கட்டுப்படுத்துகிறேன். ஒரு நாளைக்கு ஐந்தே ஐந்து பொருட்களைத்தான் உண்கிறேன். ஆனால், அந்த ஐந்து பொருட்களையும் நான் மிகவும் விரும்பி, ரசித்து உண்கிறேன். நாக்கைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் அப்படிச் செய்வானா?’

சத்தியாக்கிரக ஆசிரமத்தை நடத்தும் தலைவரே அதன் வாக்குறுதிகளைத் தான் முழுமையாகப் பின்பற்றுவதில்லை என்று சொல்வது நமக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், காந்தி இதை மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறார், அவ்வப்போது இதுபோன்ற நுட்பமான சறுக்கல்கள் இருந்தபோதும், வாக்குறுதிகள் வேண்டும், ஒவ்வொரு நாளும் அவற்றில் முன்னேறவேண்டும், அப்போது காலப்போக்கில் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!