Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 82
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 82

82. சிரமமும் நல்லதுதான்!

ஜூலை 5 அன்று, அம்ரித்லால் தக்கர் என்கிற தக்கர் பாபா காந்தியைச் சந்திக்க வந்திருந்தார்.

இவர் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். ஆறு மாதங்களுக்குமுன்னால் காந்தி இந்தியாவுக்கு வந்திறங்கிய நாளில் (ஜனவரி 9) மும்பையில் நரோத்தம் மொரார்ஜி வீட்டில் கோகலே தலைமையில் காந்தியைச் சந்தித்த தலைவர்கள், தொண்டர்களில் இவரும் ஒருவர், ‘காந்தி எங்கே?’ என்று தெரியாமல் கேட்ட கர்சன்தாஸ் சிடாலியாவைக் காந்தியிடம் மாட்டிவிட்ட குறும்புக்காரர்.

அதன்பிறகு, காந்தியும் தக்கர் பாபாவும் பூனாவில் ஒருமுறை சந்தித்தார்கள். ஆனால் அதுவும் இந்திய ஊழியர் சங்க உறுப்பினர்களோடு கூட்டமாகச் சந்தித்ததுதான். இந்த மூன்றாவது சந்திப்பில்தான் அவர்கள் தனிப்பட்ட முறையில் உரையாடுவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கும்.

காந்திக்கும் தக்கர் பாபாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். பொறியியல் படித்தவர், காந்தியைப்போலவே கோகலேவால் ஈர்க்கப்பட்டுச் சமூகப் பணிக்கு வந்தவர், இந்திய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர், காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புவதற்குமுன்பாகவே இங்கு பல்வேறு நலத் திட்டங்களை முன்னின்று செயல்படுத்திப் பெயர் வாங்கியவர்.

எனினும், காந்தியின் கூர்மையான சிந்தனையும் தெளிவான செயல்திட்டமும் தக்கர் பாபாவை மிகவும் கவர்ந்தன, அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்து செயல்படத் தொடங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!