Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 91
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 91

91. அவமதிப்புகளை மறந்துவிடுங்கள்

நவம்பர் 4 அன்று, சாரதாபஹன் மேத்தா என்பவர் சத்தியாக்கிரக ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாட்களுக்குப்பிறகு (நவம்பர் 6) இந்துலால் கன்ஹையாலால் யாக்னிக் என்பவரும் அங்கு வந்து தங்கினார்.

இவர்கள் இருவரும் குஜராத்தின் கல்வி முன்னேற்றத்துக்குப் பெரிய அளவில் பங்களித்த ஆளுமைகள். குறிப்பாக, பெண்களைப் படிக்கவைக்கவேண்டும் என்பதற்காக மிகவும் பாடுபட்டவர்கள்.

சாரதாபஹனும் அவருடைய சகோதரி வித்யாகௌரியும்தான் குஜராத் மாநிலத்திலேயே முதன்முறையாகப் பட்டம் பெற்ற பெண்கள். அதன்பிறகு, திருமணமான பெண்கள், கணவரை இழந்த இளம்பெண்களுக்கென்று ஒரு பள்ளியைத் தொடங்கினார் சாரதாபஹன். இவரும் இந்துலாலும் இணைந்து உருவாக்கிய பெண்கள் கல்லூரி நூற்றூக்கணக்கான குஜராத்திப் பெண்களின் கல்விக் கனவை உண்மையாக்கியது.

காந்தி அகமதாபாதுக்கு வருவதற்குமுன்பாகவே இவர்கள் இருவரும் தீவிரப் பொதுப்பணியில் இறங்கியிருந்தார்கள். அதன்பிறகு, இவர்களும் காந்திய வழியில் போராட்டங்கள், சமூக முன்னெடுப்புகளில் பங்கேற்றார்கள். இந்துலால் நடத்திய யங் இந்தியா, நவஜீவன் ஆகிய இதழ்களைப் பின்னர் காந்தி ஏற்று நடத்தினார்.

நவம்பர் 8 அன்று, சத்தியாக்கிரக ஆசிரமத்தில் குஜராத்திப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. அகமதாபாதில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்கிற பணியாளர்களுடைய குழந்தைகளை இந்த விழாவுக்கு அழைத்திருந்தார் காந்தி, 125க்கும் மேற்பட்ட மழலைகளோடு புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார் காந்தி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!