இந்திய வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் கல்வி மையங்களைப் பற்றிய தொடர்ச்சியான தரவுகள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பழமையான பல்கலைக்கழகமாக அறியப்படுவது நாளந்தா.
நாளந்தா என்ற சொல்லுக்குத் தாமரையின் உறைவிடம் என்று ஒரு பொருளும், அறிவை அளிப்பவர் என்ற இன்னொரு பொருளும் உள்ளது. ஞானம் ஒரு தாமரையாகவே இந்திய மரபில் உருவகிக்கப் படுகிறது. ஆகவே அந்தச் சொல் இந்தக் கல்வி நிலையத்திற்கும் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு. வழங்கிய கல்வியின் மூலம் பல மனங்களை மலர்த்தியிருக்கிறது.
நாளந்தா பல்கலைக்கழகம் குப்த வம்சத்தின் குமார குப்தாவால் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பீகாரில் உருவாக்கப்பட்டது. வானியல், சோதிடம், மருத்துவம், இலக்கணம், தர்க்கம், வேதங்கள் முதலியவை கற்பிக்கப்பட்ட மகாயான புத்தமதத்தின் பெரும் பல்கலைக்கழகமாகச் செழித்திருந்தது. இந்திய மாணவர்கள் மட்டுமின்றி திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் முதலிய நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றுச் சென்றிருக்கின்றனர். தோராயமாகப் பத்தாயிரம் மாணவர்களும் இரண்டாயிரம் ஆசிரியர்களும் இங்கே தங்கி கல்வியில் ஈடுபட்டிருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை ஆயிரத்து எழுநூறு வருடங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்த பெருமையுடைத்து.
Add Comment