மீண்டும் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியதை அடுத்துத் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை சரியே என்பது தீர்ப்பின் சாரம்.
இத்தீர்ப்பு நாடு முழுதும் பல விதமான வாத விவாதங்களைக் கிளப்பியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எப்படி இருந்தாலும் பாரதிய ஜனதா அரசு மேற்கொண்ட ஒரு நடவடிக்கை மாநில நலனுக்கு எதிரானதாகவே இருக்கும் என்ற முன்முடிவுடன் பேசுவோர் சிறிது சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் பேசுவது நல்லது.
1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுதந்தரம் வழங்கப்பட்டபோது இரு தேசங்களுக்கும் இடைப்பட்ட தனித்த சமஸ்தானமாக இருந்த காஷ்மீர், அன்றைக்கு இரண்டு நாடுகளுடனும் இணைய விரும்பவில்லை. அதே முடியாட்சியை அப்படியே தனித்துத் தொடரவே அன்றைய காஷ்மீர் மன்னர் ஹரிசிங் விரும்பினார். ஆனால் சூடு தணிவதற்குள் காஷ்மீரைக் கையகப்படுத்திவிட வேண்டும் என்று பாகிஸ்தான் நினைத்தது. கூலிப் படைகளை முன்னால் அனுப்பி, ராணுவத்தைப் பின்னால் அணி வகுக்க வைத்துக் காஷ்மீரை அபகரிக்கப் பார்த்தது.
Add Comment