இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருப்பது 5ஜி ஏல விவகாரம்தான். இந்த ஏலத்தில் வந்த தொகை, அரசாங்கம் எதிர்பார்த்ததில் பாதிகூட இல்லை என்பதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டுவிட்டது.
அலைக் கற்றை 3ஜியின் ஏலத்தொகை 51,000 கோடி; 4ஜியின் ஏலத்தொகை 78,000 கோடி; 5ஜியின் ஏலத்தொகை 1,50,000 கோடி. ஆனால் 2ஜி ஏலத்தில் மட்டும் அரசுக்கு 1,76,000 கோடி இழப்பு என்பதை எப்படி நம்புவது? இப்படிப்பட்ட கேள்விகளைப் புறந்தள்ளிவிட முடியாதுதான். 2ஜி சுழலில் சிக்கி மீண்ட முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவும் 5ஜி ஏலம் தொடர்பாகப் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.
தெளிவான விளக்கமுள்ள கட்டுரை – பல விஷயங்கள் புரிந்தன
விஸ்வநாதன்
நஷ்டத்தை ஈடு கட்ட பணத்தை வழங்குவதை விட 4ஜியை வழங்கினாலே போதுமே என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம்.இது விசித்திரமாகத்தான் உள்ளது.மொபைல் வந்த புதிதில் உள்ள ரேட்டுக்கும் தற்போதைய ரேட்டுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் நுகர்வோர் எண்ணிக்கை பிரம்மாண்டமாக உயர்ந்ததும் முக்கிய காரணம்.
2002-ல் ரிலயன்சு ரூ. 500/-க்கு 2 தொலைபேசிகள், இலவச அழைப்புகளுடன் 1 ஆண்டிற்கு வழங்கியது தான் அனைத்துப் புரட்சிகளுக்கும் துவக்கப் புள்ளி. குறுந் தகவல்கள் ரூ.1/- என்று வழங்கிய போது வே-டூ-எசமசு என்ற இணய வழி தளமும் ஒரு காரணம்.
பி.எஸ்.என்.எல். சரிந்து போனதற்குக் காரணம் எளிமையான ஒன்று. அலைபேசி இணைப்பு தனியார் மயமான பிறகு, அதற்காக அரசுத் துறையையே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. இணைப்புக்கும், குறைகளுக்கான தீர்வுகளுக்கும் அங்கிலேய ஆட்சியில் இருந்தது போல் அடிமைகளாகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. மேல் மட்ட ஊழியர்களை விட, கீழ் மட்ட ஊழியர்களை எப்போதும் தவறான வழியில் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது இப்போதைக்கு மின்சாரத்திற்கு மட்டுமே என்றாகி விட்டது.
இந்தக் கோணத்தில் இது பற்றிப் பேசும் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதே அவர்களின் வாதங்கள் புலம்பல்களாகவே போகின்றன என்பது நிதர்சனமான உண்மை.
இந்த விமர்சனம் வெளியிடப்படாமல் காணாமல் போவதற்கும் சாத்தியக்கூறுகள் உண்டென்று அறிந்திருக்கிறேன்.
‘விஷயத்திற்கு வருவோம்’ என்று உள்ளீடு செய்தால் ‘விஷத்திற்கு வருவோம்’ என்று பதிவாகிறது. விமரிசனங்களைத் திருத்தும்(எடிட் செய்யும்) வசதி இல்லை என்பது ஒரு சங்கடம்தான்.