Home » நாயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நகைச்சுவை

நாயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

பூங்காவுக்குச் செல்லலாம் என்று சில நாள்களாகவே குழந்தைகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சென்ற சனிக்கிழமை அதற்கு நேரம் வாய்த்தது. இருவரையும் அழைத்துக்கொண்டு கார்னிச் பார்க் (Chorniche Park) சென்றிருந்தேன். வழக்கமாக காரை நிறுத்தும் இடத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டு இருந்தது. சரி அடுத்தத் தெருவில் காரை நிறுத்தலாம் என்று சென்றோம்.
காரை விட்டு இறங்கிய சின்னவள், திடீரென்று குஷியாகி, தனது அக்காவை உடனே பின்னால் திரும்பிப் பார்க்கச் சொன்னாள்.

ஒரு நாய் வந்துகொண்டிருந்தது.

நாயில் என்ன ஆச்சரியம் என்றால் அபுதாபியில் நாய்கள் அபூர்வம். ஆனால் கணக்கு வழக்கில்லாமல் பூனைகள் உண்டு. நம் ஊரில் பூனை குறுக்கே வந்தால் அப சகுனம். இங்கே அது வராவிட்டால்தான் அபசகுனம் என்று மாற்றி எழுதி வைத்தால்கூட யாரும் மறுக்க மாட்டார்கள். வீட்டுக்கொரு பூனை என்பது குறைந்த பட்சம். அது போக வீதிக்குப் பத்துப் பூனைகளாவது வளர்கின்றன. நாம் படியிறங்கி வீதிக்கு வந்தால் குறைந்தது மூன்று பூனைகள் குறுக்கே போகும். எங்கோ ஒரு ஓரத்தில் தன்னை மறந்து தூங்கும் பூனைகள்கூட யாராவது வெளியே கிளம்புகிறார்கள் என்று தெரிந்தால் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு எழுந்து வந்து குறுக்கே ஓடிவிட்டு மீண்டும் சென்று விட்ட இடத்திலிருந்து தூங்கத் தொடங்கும். அவ்வளவு நல்ல மனம் கொண்ட பூனைகள் இந்த நாடு முழுதும் உண்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • புன்னகை விலகாமல் படிக்க வைக்கும் கலையில் ஸ்பெஷலைஸ் பண்ணிருக்கீங்க போல. நகைச்சு வைத் தேன் மேடம்!!

  • செம போஸ்ட்! நகைச்சுவை இழையோடும் உங்கள் விவரிப்பும் அற்புதம்! தொடர்ந்து எழுதி எங்களை சிரிக்க வையுங்கள்!

    விஸ்வநாதன்

  • படித்தவருக்கும் எழுதியவருக்கும் ”ஙே” என்பதால் தான் ஙி -ஙோ

  • நாய் வளர்ப்பு இவ்வளவு சுலபமானது இல்லை.  இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.  வளர்ப்பு நாய்களுக்கு தனியாக இருப்பதனால் மனச்சோர்வு ஏற்படும் என்று தான் இது போன்ற நாய்ப்  பார்க்குகள்   இருக்கின்றன. இது போக தனியாக  குழந்தைகளுக்கான காப்பகங்கள் போல நாய் காப்பகங்களும் உள்ளன. 

  • ரெம்ப “லொள்ளா” இருக்கு இந்த நாயதிகாரம். அதுக்கு உற்சாகத் தடை பன்றது “நாயமில்லே”ங்கிறேன்..!!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!