“இரண்டு சுமாரான தயாரிப்புகளைச் செய்வதை விட, ஒரு சிறந்த தயாரிப்பைச் செய்வது மேல், அதற்குத் தேவையானது முழுக் கவனம் என்று எனது முதல் மேலாளரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்”. இதைச் சொன்னவர் நெட்பிளிக்ஸ் இணைய ஒளிபரப்பு நிறுவனத்தின் நிறுவனருமான ரீட் ஹேஸ்டிங்ஸ் (Reed Hastings). சீனா, சிரியா, ரஷ்யா, மற்றும் வட கொரியா – இந்த நான்கு நாடுகளைத் தவிர உலகில் இருக்கும் 190க்கு மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனத்தின் பொழுதுபோக்கு செயலி கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் பயனர்கள் அதில் தினமும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் செலவு செய்கிறார்கள். இந்தளவு பிரபலமான இந்தச் சேவை உருவாக்கப்பட்டு வளர்ந்த கதையைப் பார்ப்போம்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவில் யாரைப் பார்த்தாலும் இணையத்தளங்களைத் தொடங்கிக் கொண்டிருந்தார்கள். அமேசான் வெற்றியால் கவரப்பட்ட இளைஞரான ரீட், அப்போது அவரின் மென்பொருள் நிறுவனத்தை விற்றிருந்தார். கையில் இருந்த பணத்தைக் கொண்டு இணையத்தில் வணிகம் செய்யலாம் என்று அவரும் நண்பர் மார்க் ராண்டால்ஃப்பும் (Marc Randolph) பல நாள்கள் ஆலோசித்தார்கள். இணையம் வழியாக விற்க, தலைக்குத் தேய்த்துக் குளிக்கும் ஷாம்பு, வளர்ப்புப் பிராணிகளுக்குக்கான தனிச்சிறப்புடைய உணவுகள் என்று மார்க் சொன்ன பல யோசனைகளை நிராகரித்தர் ரீட்.
Add Comment