ஐயோ பாவம்
நைல் நதியின் மாசினை அகற்றி எகிப்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க எகிப்து அரசு என்னதான் செய்கிறது? அமெரிக்காவும் உலக சுகாதார அமைப்பும் எப்படி உதவுகின்றன கேட்ஸ் அறக்கட்டளை, கிளிண்டன் அறக்கட்டளை என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பாக பிரச்சினைகளின் காரணங்களும் தெரிய வேண்டும் அல்லவா?
நைல் நதி எங்களின் வாழ்க்கைக்கான ஆதாரம் இல்லை, அதுதான் எங்கள் வாழ்க்கை என்று எகிப்து நாட்டின் பிரதமர் கூறுகிறார். ஆனால் வாழ்க்கை வளத்தைப் பேணிப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்.
ஒரு வருடத்திற்குச் சராசரியாக 150 மில்லியன் டன் கொள்ளளவிற்கும் மேலாக வேதியியல் கழிவுகள் நைல் நதியில் கலக்கின்றன. இதைத் தவிரப் போர்களினால் வரும் புகை மாசு, பருவச் சூழலால் வந்த தாக்கம் வேறு.
பருவ கால மாற்றங்களால் உயரும் மத்தியத் தரக் கடல்நீர் ஆற்றுநீரில் கலக்கிறது. உப்பு அளவு உயர்வதால் இறக்கும் மீன்கள். இதனால், 97 சதவீத மக்கள் நல்ல குடிநீர் கூட இன்றி கஷ்டப்படுகிற நிலை.
நல்ல கட்டுரை. சிந்தனையின் பல பாதைகளை இது திறந்து விடுகிறது. “அண்டை நாடுகளில் என்ன நடந்தால் நமக்கென்ன?” என்பது “எவ்வளவு தொந்தரவுகளையும் வீழ்ச்சியையும் தரும்?” என்ற பாதையில் நம்மைத் திருப்புகிறது. நம் தேசத்திற்கும் இந்தக் கவலை பொருந்தும்.