சூடானின் தணியாத தாகம்
ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது,
ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனால், எகிப்திற்குச் சாதகமாகவே நீரைப் பங்கிட்டது பிரிட்டன். அதன்படி நைல் நதி நீரை, 66 சதவீதம் எகிப்தும் 26 சதவீதம் சூடானும் பயன்படுத்தும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுதந்திரம் அடைந்த பின்னும் எப்போதும் அது ஒரு கலவரப் பூமி. இஸ்லாமியர்கள் வாழும் வடக்கு சூடான், கிறித்துவர்கள் வாழும் தெற்கு சூடான் என இரண்டு பிரதேசங்களின் இடையே கலவரத்துக்குக் குறைவே இல்லை. வடக்கு இஸ்லாமியர்கள் முன்னணிக்கும் தெற்கு சூடான் மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையே பல ஆண்டுகள் தொடர்ந்தது போராட்டம். முடிவில் கோடிக்கணக்கான மக்களைக் காவு கொடுத்த பின், தெற்கு சூடான் 2011இல் பிரிந்து சுதந்திர நாடாயிற்று. வடக்குப் பகுதி சூடான் என அழைக்கப்பட்டது.
Add Comment