Home » நீலமலை ரகசியம் – 2
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 2

2. வழி

சல்லிவன் மலையேற்றத்திலிருந்துதான் தற்போதைய நீலகிரியின் வரலாறு தொடங்குகிறது. அவர் இன்னும் சில கோப்புகள், மலையேறும் வழி பற்றிய குறிப்புகள் முதலியவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளட்டும். நாம் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு நீலகிரி எப்படி இருந்தது, அதுவரை என்னென்ன வரலாற்றுக் குறிப்புகள் இருந்தன என்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொண்டு வந்துவிடலாம்.

நீலகிரியின் அதிகாரப்பூர்வ வரலாற்றுக் குறிப்புகள் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. கிபி 930இல் நீலமலைகள் கர்நாடகத்தைச் சார்ந்த மேற்கு கங்க வம்சத்தின் கீழ் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. ரச்சமல்லன் என்கிற அரசனுக்கும், புட்டுகன் என்கிற அவன் சகோதரனுக்கும் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு ரச்சமல்லன் கொல்லப்பட்டு, புட்டுகன் அரசனாகியிருக்கிறான். இப்போதைய மேற்கு கர்நாடகத்தையும், கிழக்கு கேரளத்தையும் தன் வசப்படுத்தி ஆண்டிருக்கிறான். அப்போது நீலகிரி, வயநாடு சமஸ்தானத்தில் இருந்திருக்கிறது. இதுதான் நீலமலைகள் பற்றி வரலாறு கொண்டிருக்கும் முதல் கல்வெட்டுச் சான்று.

பதினோறாம் நூற்றாண்டில் இந்த கங்க வம்சம், கடங்க வம்சத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டு, நீலமலையின் அதிகாரம் அவர்கள் வசம் சென்றிருக்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் ஹோய்சாளர்கள் கை ஓங்கியிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!