123. ஊரும் சேரியும்
‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார்.
‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன்.
‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா, அதெல்லாம் பிராக்ட்டிக்கலா சரியா வராதுனு அவனுக்கு அட்வைஸ் பண்றதை விட்டுட்டு இவன் ஏண்டா அவனை என்கரேஜ் பண்றான்’ என்று பொங்கினான்.
இவனுக்கு இதேதான் வேலை. எதையாவது ஒன்றைத் தூக்கிக்கொண்டு அவசியமேயில்லாமல் பொங்கிக்கொண்டு இருக்கவேண்டியது என்று, முதலில் அதை இவன் பொருட்படுத்தவில்லை. போகுமிடமெல்லாம் சிவக்குமார் அதையே பேசிக்கொண்டு திரிகிறான் என்பது பின்னர்தான் தெரியவந்தது.
Add Comment