Home » ஆபீஸ் – 15
தொடரும் நாவல்

ஆபீஸ் – 15

ஓவியம்: ராஜன்

15 புளூபெல்

எழுத்தில் மட்டும் என்றில்லாமல்  எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம்.

ஆபீஸ் வராந்தாவில் யாரோ காதில் டிரான்ஸிஸ்டரை வைத்துக் கேட்டுக்கொண்டே கழிப்பறையை நோக்கிப் போனார்கள். கிரிக்கெட் மேட்ச்சாக இருக்கவேண்டும்.

O

செண்ட்ரலுக்கு எதிரிலிருந்த பொது மருத்துவனையின் கான்ஸர் வார்டின் இரும்புக் கட்டிலில் கூடாகிப் போயிருந்த தேகத்துடன் கண்மூடிப் படுத்திருந்த பெரியவர், மெல்ல எழுந்து, கோடியில் இருந்த கழிப்பறைக்குப் போய் நிதானமாக பீடி பிடித்துவிட்டுத் திரும்பி வந்தார். கழுத்தில் மஞ்சள் கயிற்றுடன் நைந்து சாயம் போயிருந்த சேலையில் வெறுங்கழுத்துடன் உட்கார்ந்திருந்த மனைவியைப் பார்க்க துக்கம் முட்டிக்கொண்டு வந்தது.

அவர், கட்டில் அருகில் வந்ததும் ம்ஹ்ம் என்று முகத்தைச் சுளித்தபடி முந்தானையால் மூக்கைப் பொத்திக்கொண்டு எரித்து விடுவது போல கோபமாய் பார்த்தாள் அந்தப் பெண்மணி..

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!