எங்க அப்பா அவர் வாழ்க்கைல செஞ்ச நல்ல விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு என்னைப் பெத்தது. இன்னோண்ணு அவர் செத்தது.
5 முதல் மாற்றல்
கல்கியில் வந்தது போக, அவனுடைய சிறுகதைகள், கணையாழி, கவனம், பெங்களூரில் இருந்து வந்த பிருந்தாவனம் போன்ற சிறுபத்திரிகைகளில் அடுத்தடுத்து வெளியாகி, இலக்கியச் சிறுவட்டத்திற்குள் அவனுடையதும் ஒரு பெயர் என்று ஆகத் தொடங்கியிருந்தது.
அப்பா இறந்து போனாலும் எதிர்காலம் பிரகாசமாகவே இருப்பதாகத் தோன்றியது.
இனி, தான்தான் அவனுக்கு டீ வாங்கித் தந்தாகவேண்டும் என்று விளையாட்டாய்கூட ரமேஷ் சொல்லமாட்டான். அவனுக்கே, என்னவாக இருக்கப்போகிறது என்று தெரியாதிருந்த அவனுடைய எதிர்காலம் திடீரென பிரகாசமாகிவிட்டதற்கு அடிப்படைக் காரணமே அவன் அப்பா இறந்து போனதுதான் என்று சொல்லவேண்டும்.
விமலாதித்த மாமல்லன் மாறவேயில்லை.
80களில் திருவல்லிக்கேணி, கணையாழி அலுவலகத்தில், எடிட்டர் கஸ்தூரி ரங்கன் வருவார் என்று காத்திருந்த நேரத்தில் பார்த்த அதே நபர்தான்.
“கத்தி இரு பக்கங்களிலும் கூர்மையான சரிவாயிருந்தது” என்பது போன்ற விவரிப்புகள் இல்லையென்றாலும், ‘சதக்’கென்று குத்துவது போன்ற நேர்ப்படச் சொல்லும் கதை நேர்த்தி எனக்கு(வேண்டுமானால்) பிடித்துப் போகலாம்… சந்தையில் நிற்குமா?
விமலாதித்த மாமல்லன் தனது ஆபீஸ் செக்சன் ஹெட் கஸ்தூரிபாய் என்பவரை திருமதி காந்தியடிகள் என்று வர்ணிப்பது அவரது நையாண்டி நகைச்சுவை. பலதரப்பு தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கப் போகிறார் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.
இருபது விமலாதித்தன் அறுபதிலும் மாறாமல் அப்படியே இருப்பதுதான் சுவாரஸ்மும், ஆச்சரியமும்