16 அறையும் வீடும்
மாலையில் ஆபீஸ் விட்டதும், அத்தனை டிராபிக்கிலும் பறக்காத குறையாக டிரைவ் இன்னை பார்க்கப் பாய்ந்தது அவனுடைய சைக்கிள்.
சைக்கிளைப் பூட்டியபடியே உள்ளே பார்த்தான். ரங்கன் துரைராஜ் அவனைப் பார்த்துக் கையைத் தூக்கிக் காட்டினார். எப்போதும் போல அவர் அருகில் அமர்ந்து, அவ்வளவு கும்பலிலும் ஏகாந்தமாய் இருப்பவன் போல அண்ணாந்து கூரைக்காய் சிகரெட் புகையை ஊதிக்கொண்டிருந்தான் ராஜன் சர்மா.
Add Comment