காலைல எட்டறைக்குக் கெளம்பிடுவோம். சாயங்காலம் ஆறரைக்கு வந்துருவோம் என்று சொல்லி, வளையத்திலிருந்து கழற்றி ஒரு சாவியைக் கொடுத்தான், மணி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட உயரமான பையன். இவன்தான், இருக்கட்டும் சாவிக்கு என்ன இப்ப என்று மறுநாள் சாயங்காலமாகப் பெட்டியுடன் வந்தான்.
அவர்கள் மூவரும் அப்போதுதான் வந்திருந்தனர். இன்னும் சட்டையைக் கூடக் கழற்றியிருக்கவில்லை. இவனைப் பார்த்ததும் பேச உட்கார்ந்துவிட்டனர். மெட்ராஸ்காரன் என்று ஆபீஸைப்போலவே அவர்களும் தன்னை அதிசயமாகப் பார்ப்பதாகத் தோன்றிற்று.
மூவருமே பெருந்துறையில் இருந்த மெட்ராஸ் ஆட்டோ பார்ட்ஸ்ஸில் வேலையாக இருப்பதாய் கூறினர்.
Add Comment