125. பிரியாத பந்தம்
இன்றைக்கு நடக்கும் காதல் திருமணங்கள் பல வெகு சீக்கிரமாகவே தோல்வி அடைந்து விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடுவதைப் பார்க்கிறோம். அந்தக் காலத்தில் தோல்வி அடைந்த காதல் திருமணங்கள் கோர்ட் வரை அதிக அளவில் போகவில்லை. ஆனால், அவர்களுக்கு இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது என்பது என்னவோ நிஜம்.
அதற்கு ஓர் உதாரணம்தான் ஃபெரோஸ் – இந்திரா திருமணம். முதலில் நேரு சம்மதிக்கவில்லை என்றாலும், இந்திராவின் பிடிவாதம் காரணமாகவும், திருமணத்துக்கு சம்மதிக்காது போனால், அது தன் இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதற்காகவும் தான் அவர் சம்மதித்தார்.
ஆனால், சீக்கிரமே ஃபெரோசுக்கும், இந்திராவுக்கும் இடையிலான காதல் கசந்து போனது. ஆனாலும் குடும்ப கௌரவம் என்ற நூல் அறுந்து போகாமல் காப்பாற்ற நினைத்தார்கள். அதே சமயம், தங்கள் மனக்கசப்பையும் அவ்வப்போது வெளிப்படுத்தினார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்துதான் உள்ளார்கள். ஆனாலும் ஈகோ