146. மனச்சாட்சிப்படி ஓட்டு
ஆரம்பத்தில், சஞ்சீவ ரெட்டியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் இந்திரா காந்தியே கையெழுத்துப் போட்டு, தான் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கினாலும், வி.வி.கிரியை போட்டி வேட்பாளராகக் களமிறக்கியதன் மூலமாக தன் உண்மையான எண்ணம் என்ன என்பதை வெளிப்படுத்தி விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், இந்திரா காந்தியைக் கிண்டல் செய்யும் வகையில் ராஜாஜி அவருக்குத் தனிப்பட்டமுறையில் ஒரு கடிதம் எழுதினார்.
“ஜனாதிபதிப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் நீங்களே ஜனாதிபதி ஆகிவிடலாமே? மொரார்ஜியை பிரதமர் ஆக்கிவிடலாமே?” என்று அவர் யோசனை தெரிவித்தார்.
இந்திரா காந்தியோ ராஜாஜியின் இந்த யோசனையை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு ரசிக்கும் மனநிலையில் இல்லை.
சி.டி.தேஷ்முக். பிரிட்டிஷ் அரசாங்கம் ரிசர் வங்கியின் கவர்னராக நியமித்த முதல் இந்திய ஐ.சி.எஸ். அதிகாரி. பின்னாளில் இந்திய நிதி அமைச்சராகவும் இருந்தவர்.
Add Comment