Home » பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஒரு ரவுண்ட் அப்
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஒரு ரவுண்ட் அப்

பி.வி. சிந்து

கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி போட்டியாளர்கள் செய்ன் நதியில் வலம் வர, பாரிஸில் ஜெகஜோதியாகத் தொடங்கியிருக்கிறது 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள். ஜூலை 26 ஆம் தேதி அந்நாட்டு நேரப்படி மாலை 7 .30 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுமார் நான்கு மணி நேர நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அதிபர் இமானுவேல் மாக்ரோன், ஒலிம்பிக் போட்டிகள் முறைப்படி தொடங்குவதாக அறிவித்தார்.

சரியாக நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸ் நகரம் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 1900 மற்றும் 1924 ஆண்டுகளில் அங்கு ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது.

இம்முறை சிறப்பு ஏற்பாடுகளாக லேடி காகா, செலின் டியான் என வெளிநாட்டுக் கலைஞர்கள் முதல் நாட்டின் பாரம்பரியப் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையிலான கலை ஏற்பாடுகளை இயக்குநர் தாமஸ் ஜாலி செய்திருந்தார். நடால் முதல் பல பிரான்ஸ் வீரர்கள் ஒலிம்பிக் ஜோதியை கொண்டு வந்து இறுதியில் ராட்சத பலூன் அமைப்பில் ஜோதி ஏற்றப்பட்டு விழா தொடங்கப்பட்டது.

வரலாற்றிலேயே முதல் முறையாக, விளையாட்டு அரங்கத்தில் அல்லாமல் நதியில் அறிமுக விழாவை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஒலிம்பிக் விளையாட்டுகளின் வழக்கப்படி, பங்குபெறும் உலக நாடுகளின் வீரர்கள், அவரவர் நாட்டுக்கொடிகளுடன் அரங்கினுள் அணிவகுத்துவருவது வழக்கம். இம்முறை அவர்கள் படகுகளில் மிதந்து, இருபுறக் கரைகளிலும் மக்கள் சூழ்ந்திருக்க ஊர்வலமாக விழா மேடையைச் சென்றடைந்தனர்.
இருநூற்று ஆறு நாடுகளிலிருந்து சுமார் 10,500 வீரர் வீராங்கனைகள் , பெரியதும் சிறியதுமாக 100 படகுகளில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்திலிருந்து தொடங்கி ஆறு கிலோமீட்டர்கள் நதி வழியே டொரக்கடேரோ என்ற இடம் வந்து சேர்ந்தனர். வழியெங்கும் அந்நகரின் முக்கிய புராதன இடங்களில் ஆடல் பாடல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறை ஆண்களும் பெண்களும் சம அளவில் களம் காணப் போகிறார்கள் என்பதையும் ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறை என்ற கணக்கில் எழுதிக்கொள்ளலாம். ஆம். பங்கேற்கும் 10 , 500 பேரில் 5250 பேர் ஆண்கள் 5250 பெண்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்