எழுநூறு பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது இன்போஸிஸ் நிறுவனம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2022ஆம் ஆண்டு வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள். சுமார் இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து பணியில் சேர்ந்தவர்கள். மூன்று முறை நடத்தப்பட்ட மதிப்பீட்டுத் தேர்வுகளிலும் அந்தப் பணியாளர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதனால் எங்கள் ப்ராஜெக்ட்களில் பணி புரியும் அளவு அவர்களுக்குச் செயல்திறன் இல்லை என்று காரணம் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
மதிப்பீட்டுத் தேர்வுகளில் வெற்றி பெறாத காரணத்தால்தான் அந்தப் புதிய பணியாளர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளதா இன்போஸிஸ் நிறுவனம்? எந்த முறையில் வளாக நேர்காணல் செய்கிறது?
வளாக நேர்காணல் மூலம் இன்போசிஸிஸ் நிறுவனம் மாணவர்களை பணிக்குத் தேர்வு செய்யும் முறை:
மதிப்பெண்கள் அடிப்படையிலோ கல்லூரி நிர்வாகம் பரிந்துரைக்கும் அடிப்படையிலோ பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து திறன் சோதனைத் தேர்வு (Aptitute Test) நடத்துவார்கள். அதில் தேர்வு பெறும் மாணவர்கள் குழு விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு தலைப்பில் மாணவர்கள் விவாதிக்க வேண்டும். அதில் அவர்களுடைய மொழி ஆளுமை, தங்களுடைய கருத்தில் இருக்கும் தீவிரம், அதைச் சொல்லும் விதம். எதிர்க் கருத்தை மறுக்கும் முறை போன்றவற்றின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.
Add Comment