தேன்கூட்டைக் கலைத்தாற்போல முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மீது பல வழக்குகள் பதிவாகும் என்பது தெரிந்தாலும், அவர் சட்டப்படி ஆதாரப்பூர்வமாகக் குற்றம் (indicted) சாட்டப்படுவார் என்பதை அவ்வளவு நிச்சயமாக யாரும் அறிந்திருக்கவில்லை. அதிபர் ஒபாமா பதவிக்காலத்தில் இருந்த நெறிமுறைகள் துறைக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டது போலச் செயலாற்றியது அதிபர் டிரம்ப்பின் தலைமை!
நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் ஜூரிகளால் நியூயார்க்கில் குற்றம் சாட்டப்படுவது முன்னாள் அதிபராகவே இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமெனக் காட்டி, பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்தது. எப்படி ஒரு முன்னாள் அதிபரைக் கைது செய்வார்கள் என்பதை ஊடகங்கள் விவாதித்து, பின் பார்த்துத் தெரிந்துகொண்டார்கள்.
Add Comment