Home » பணம் படைக்கும் கலை – 20
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 20

20. வரவு, செலவு, வரம்பு

நாங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு முதல் வேலையில் சேர்ந்திருந்த நேரம். கையில் கணிசமாகக் காசு புழங்கியது. அதனால், திரைப்படம், உணவகம், வெளியூர்ப் பயணங்கள், புதிய உடைகள் என்று நன்றாகச் செலவு செய்தோம், வாழ்க்கையை அனுபவித்தோம்.

ஆனால், எங்களோடு வேலை செய்துகொண்டிருந்த ஒருவன்மட்டும் இதிலிருந்தெல்லாம் சற்று ஒதுங்கித்தான் இருப்பான். அதாவது, பணத்தை அள்ளி அள்ளிச் செலவு செய்யாமல், கிள்ளிக் கிள்ளிச் செலவு செய்வான்.

எடுத்துக்காட்டாக, நாங்கள் எல்லாரும் உணவகத்துக்குச் செல்லும்போது மற்றவர்கள் வட இந்திய, சீன உணவு வகைகளை ஆர்டர் செய்வோம். இவன்மட்டும் ‘ரெண்டு இட்லி போதும்’ என்பான். மற்றவர்கள் ‘சாக்லெட் மில்க் ஷேக்’ குடித்தால் இவன் ‘லெமன் ஜூஸ்’ வாங்கிக்கொள்வான். மற்றவர்கள் மாதம் நான்கு திரைப்படங்களைப் பார்த்தால், இவன் இரண்டு மாதத்துக்கு ஒரு படம்தான் பார்ப்பான். மற்றவர்கள் ‘லாண்டரி’க்காரரிடம் துணிகளைப் போட்டால், இவன்மட்டும் வாரம் இரண்டு, மூன்று மணி நேரம் செலவிட்டுத் தன்னுடைய துணிகளையெல்லாம் தானே துவைத்துக்கொள்வான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!