50. Active கூடை, Passive கூடை
மியூச்சுவல் ஃபண்ட்களில் எந்தெந்தப் பங்குகளை (அல்லது வேறு சொத்துகளை) வாங்குவது, விற்பது என்று தீர்மானிப்பது ஒரு கலை. இதைச் சரியாகச் செய்தால் நல்லிசை கேட்கும். மோசமாகச் செய்தால் காது கிழியும்.
அதாவது, சரியான பங்குகளை வாங்குகிற, அவை மோசமான நிலைக்குச் சென்றுவிட்டால் சரியான நேரத்தில் அவற்றை விற்று வெளியேறுகிற மியூச்சுவல் ஃபண்ட்களின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களைத் தேடிப் பிடித்து முதலீடு செய்துவிட்டால் நாம் தனியாக எதுவும் செய்யவேண்டியதில்லை. நம் பணம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.
ஆனால், அவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது?
அதற்குமுன்னால், மியூச்சுவல் ஃபண்ட்களுக்குக் கீழுள்ள பங்குகள் எப்படித் தீர்மானிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்: Active, Passive.
Add Comment