Home » பணம் படைக்கும் கலை – 21
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 21

21. நெருக்கடி நேர நிதி

வரும் நவம்பர் மாதத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பல போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கெனச் சுமார் 16 பேர் கொண்ட ஓர் அணியைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்.

16 பேரா? பொதுவாக ஒரு கிரிக்கெட் அணியில் 11 பேர்தானே விளையாடுவார்கள்? கூடுதலாக 5 பேர் எதற்கு?

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியில் விளையாடப்போவது 11 பேர்தான். ஆனால் அதற்காகச் சரியாக 11 பேரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பமுடியாது. இவர்களில் யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போகலாம், அடிபடலாம், அல்லது, அவர்கள் சரியாக விளையாடாமல் சொதப்பலாம்… இதுபோன்ற சூழ்நிலைகளில் மீதமுள்ள ஐந்து பேரைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

ஆக, 11 பேர் தேவைப்படும் இடத்தில் 16 பேரை அனுப்பிவைப்பது ஒருவிதமான பாதுகாப்பு ஏற்பாடு. தேவைக்குமேல் கூடுதலாக ஐந்து பேரை அவ்வளவு தொலைவுக்கு விமானத்தில் அனுப்பிவைத்து, நட்சத்திர விடுதியில் தங்கவைத்து, எல்லா வசதிகளையும் செய்துகொடுத்துக் கூடுதலாக அவர்களுக்குச் சம்பளமும் கொடுப்பது வீண் செலவு என்று நாம் நினைக்கலாம். ஆனால், மேற்சொன்னதுபோல் ஏதாவது சிக்கல் வந்துவிட்டால் அந்த நேரத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்காதபடி இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுதான் அணிக்குக் கை கொடுக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!