Home » பணம் படைக்கும் கலை – 4
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 4

4. கும்பளம்

முன்பெல்லாம் யாராவது தன்னுடைய வேலையைப்பற்றி அல்லது தொழிலைப்பற்றிப் பேசினால், ‘அது சரி, மாசாமாசம் சம்பளம் எவ்வளவு வருது? கிம்பளம் ஏதும் உண்டா?’ என்று கேட்பார்கள்.

சம்பளம் புரிகிறது. அதென்ன கிம்பளம்?

நாம் எல்லாரும் வண்டி, கிண்டி, கலாட்டா, கிலாட்டா, வம்பு, கிம்பு, மழை, கிழை என்பதுபோன்ற இரட்டைச் சொற்களைக் கேட்டிருப்போம், பயன்படுத்தியிருப்போம். இவற்றுள் வண்டி, கலாட்டா, வம்பு, மழை ஆகிய சொற்களுக்குப் பொருள் உண்டு, அவற்றோடு வருகிற கிண்டி, கிலாட்டா, கிம்பு, கிழை போன்ற சொற்களுக்குப் பொருள் கிடையாது. அதுபோல, சம்பளத்துடன் கிம்பளமும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. அதற்குத் தனிப் பொருள் எதுவும் இல்லை.

ஆனால், பேச்சுவழக்கில் கிம்பளம் என்பது ஒருவர் தன்னுடைய பணியைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் சேர்க்கும் பணம் என்கிற பொருள் வந்துவிட்டது. எடுத்துக்காட்டாக, காவல்துறை அலுவலர் ஒருவர் அரசாங்கத்திடம் வாங்குவது சம்பளம், பொதுமக்களை மிரட்டி வாங்கும் லஞ்சப் பணம் கிம்பளம். அப்படி அகரமுதலி சொல்லவில்லை, மக்கள் நம்புகிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!