மனித உடலுறுப்புகளில் முதன்மையானது நாசி என்றே சொல்லலாம். நல்ல மணத்தையும், கெட்ட மணத்தையும் உடனே அடையாளங்காட்டி நம்மை அதை ரசிக்கவோ, அருவருக்கவோ வைக்கக்கூடிய சக்தி படைத்தாதாயிற்றே…. நாம் நுகரும் வாசனையானது நினைவுகளைத் தூண்டிவிடும் சக்தி படைத்தது.
சிறுவயதில் யாராவது மல்லிகைப் பூ மணம் படைத்த செண்ட்டைப் பூசி உங்களைக் கடந்து செல்கையில் அந்த நறுமணத்தை அனுபவித்திருப்பீர்கள். பின்னாளில் பல ஆண்டுகள் கழித்தும்கூட எங்கேனும் மல்லிகை மண செண்ட்டை நுகர்கையில் சிறுவயதில் உங்களை அதே வாசனையுடன் கடந்த முகம் நினைவில் வந்துபோகும். பெயர் தெரியாத ஒரு வாசனைத் திரவியம் உங்களுக்கு உங்கள் பாட்டியின் அண்மையை நினைவூட்டலாம். மஞ்சள் எண்ணெயின் வாசம் அம்மா தரும் நெற்றி முத்தத்தை நினைவுபடுத்தலாம். அம்மா செய்து தரும் மிளகு ரசம், பாட்டி செய்து தரும் காரக் குழம்பு ஆகியவற்றின் வாசனையே பின்னாளில் எங்கு நுகர்ந்தாலும் உங்கள் மனக்கண்ணில் அந்த முகங்களை மலர வைக்கும்.
Add Comment