Home » அணையாத ஆயிரம் விளக்குகள்
மருத்துவம்

அணையாத ஆயிரம் விளக்குகள்

இளவரசர் பிரடெரிக்

லக்சம்பர்க் நாட்டு இளவரசர் இருபத்திரண்டு வயதில் மரணமடைந்திருக்கிறார். காரணம், குணப்படுத்தமுடியாத அரியவகை மரபியல் நோய்.

ஐரோப்பாவில், பிரான்ஸுக்கு அருகில் அமைந்துள்ள குட்டி நாடு லக்சம்பர்க். உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. இங்கிலாந்தைப் போலவே இங்கும் அரச குடும்பம் உண்டு. முடியாட்சியுடன் கூடிய மக்களாட்சி செயல்படும் இந்நாட்டின் மக்கள்தொகை சுமார் ஏழு லட்சம் மட்டுமே.

பெரும்பாலான பிள்ளைகளைப் போல பிறக்கும்போது இயல்பான குழந்தையாகவே இருந்தார் இளவரசர் பிரடெரிக். பதிநான்கு வயதுவரையிலும் எந்தப் பிரச்சனையுமில்லை. பிறகுதான் அவருக்கு போல்க் (POLG) குறைபாடு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

போல்க் என்றால் என்ன?

நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. உண்ணும் உணவிலிருக்கும் சத்துக்களை எடுத்து, உடல் இயக்கங்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவது செல்களில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவின் பணி. இவற்றுக்கு ‘செல்களின் சக்தி நிலையம்’ என்ற பெயருமுண்டு. இந்தச் சக்தி நிலையங்களில் ஏற்படும் பிறழ்வே போல்க் குறைபாடு எனப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!