புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட அனைவரும் பரிபூரண குணம் அடைவது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வில் நடந்த நிகழ்வு இது.
பதினாறு பேர் மட்டுமே பங்குகொண்ட சிறிய ஆய்வுதான். அதில் முழுமையாகச் சிகிச்சை எடுத்துக்கொண்ட பன்னிரண்டு பேரினுடைய முடிவுகள் மட்டும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நான்கு பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட (stage II or Stage III) மலக்குடல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள். முழு சிகிச்சை பெற்றுக்கொண்ட பன்னிரண்டு பேரும் நோயிலிருந்து பரிபூரண குணம் அடைந்துள்ளனர்.
கடந்த சில பத்தாண்டுகளாக மலக்குடல் புற்றுநோய்க்கு அளிக்கப்பட்டு வரும் சிசிச்சை முறைகளில் குறிப்பிடத்தகுந்த பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அச்சிகிச்சை முறைகள் பெரும்பாலும் கதிரியக்க, மருந்து மற்றும் அறுவைச் சிகிச்சை முறையைச் சார்ந்தவை (Radiation therapy, Chemo therapy and surgical procedures). இதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டோரில், பெரும்பான்மையானோரின் ஆயுளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்பட்டது உண்மை. கிட்டத்தட்ட எழுபத்தேழு சதவீதம் பேர் நோய் அறிகுறிகள் ஏதும் இன்றி மூன்றாண்டுகள் வாழக் கூடிய சாத்தியக்கூறு ஏற்பட்டது…
Add Comment